சோதனை இல்லை, கண்காணிப்பும் இல்லை: குமரிக்கு காத்திருக்கும் பேராபத்து

கேரளாவில் இருந்து வருப்பவர்களிடம் சோதனை நடத்தப்படாததால், கன்னியாகுமரியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

Update: 2021-09-08 15:53 GMT

கேரளாவில் இருந்து வருவோரை கண்காணிக்க, சோதனைச்சாவடியில் எந்த நடவடிக்கையும் இல்லை.

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், அங்கு தினசரி பாதிப்பு  எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.  கேரளா மாநிலம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு நிபா வைரசும் மிரட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழக - கேரளா எல்லை சோதனைச்சாவடிகளில்,  சோதனை தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஆனால், அவ்வாறு சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படாதது, குமரி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நுழையும் 13 சாலை பகுதிகளில் சோதனைச்சாவடிகள் இருக்கும் நிலையில் பிரதானமான களியக்காவிளை சோதனை சாவடியை தவிர,  வேறு எங்கும் சோதனைகள் நடைபெறுவது இல்லை. களியக்காவிளை சோதனைச்சாவடியிலும்,  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் வாகன சோதனை மட்டும் நடைபெறுகிறது.

இதனல், பேருந்துகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மூலம் ஏராளமானோர் எந்த தங்கு தடையும் இன்றி குமரி மாவட்டம் வந்து செல்வதால் குமரியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, அனைத்து சோதனைச்சாவடிகளிலும் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை கொண்ட குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News