வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது;
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வருகின்றது.
சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது பல்வேறு பகுதிகளில் ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், போன்றவற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகும் கனமழை காரணமாக வும் பெருமளவில் நீர் வெளியேறியது.
இந்த மழை வெள்ளம் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது, இதன் காரணமாக மாவட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து உள்ளது, 1200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்ட நெல் கதிர்கள் உட்கோஅட மாவட்டம் முழுவதும் 4000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்ட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேபோன்று ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கி உள்ளன இதுவரை கன்னியாகுமரி மாவட்டம் சந்திக்காத அளவில் பெய்த கனமழை தொடர்ந்தால் பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற நிலையில் மீட்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது