அதி வேகம்: ஆபத்து உணராததால் 3 பள்ளி மாணவர்கள் பலி

அதி வேகம் ஆபத்து என்பதை உணராமல் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பலி ஆகிய நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.;

Update: 2022-01-05 17:00 GMT

பைல் படம்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருவிக்கரை பகுதியில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய பெனிஸ், ஸ்டெபின், முல்லப்பன் என்ற மூன்று மாணவர்கள் இன்று மாலை நேரத்தில் ஒரே பைக்கில் அமர்ந்து பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளனர்.

பைக் வளையலை பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் நின்றிருந்த மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் மூன்று மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த காட்சிகள் விபத்து நடந்த இடத்தில் இருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News