குமரி மலையோர பகுதிகளில் கனமழை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
குமரி மலையோர பகுதிகளில் தொடரும் கனமழையால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது
அதன்படி 48 கனஅளவு கொண்ட பேச்சிபாறை அணையின் நீர் மட்டம் 44 அடியை எட்டியதால் அங்கிருந்து 1800 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இதே போன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73 கன அடியை எட்டியதால் அங்கிருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போன்று சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகளில் இருந்தும் சராசரியாக 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது, இதனால் தாமிரபரணி ஆறு, பரளி ஆறு கோதையாறு போன்றவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது.
மழை நீடித்தால் கூடுதலாக உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுபணிதுறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.