குமரியில் தொடர் கனமழை: வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழியும் மாத்தூர் தொட்டிபாலம்
குமரியில் கனமழையால் ஆசியாவிலேயே மிக நீளமான மாத்தூர் தொட்டிபாலம் வரலாற்றில் முதன்முறையாக நிரம்பி வழிகிறது.
வட கிழக்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மிதந்து வருகின்றன.
இந்நிலையில் நாகர்கோவில் அருகே தடிக்காரண்கோணம் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிக நீளமான புகழ் பெற்ற மாத்தூர் தொட்டி பாலம் வரலாற்றில் முதன் முறையாக நிரம்பி வழிகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் அப்பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.