கனமழை காரணமாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு

குமரியில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது.;

Update: 2021-10-31 15:45 GMT

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

கன்னியாகுமரி மாவட்டதில் மலையோர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறத, இதனால் முக்கிய அணை பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. அதன்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை 44 அடியை எட்டியதை அடுத்து அங்கிருந்து வினாடிக்கு 1500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து தடுப்புகளை தாண்டி கொட்டுகிறது, மேலும் திற்பரப்புநீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மலையோர பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அணை பகுதிகளில் பொதுப்பணி துறையின் முகாமிட்டு நீர் வரத்துக்கு ஏற்ற போல் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News