குமரியில் கடத்த முயன்ற 105 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

குமரியில் எல்லை சோதனைச்சாவடி வழியாக கடத்த முயன்ற 105 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

Update: 2022-03-15 12:15 GMT

கஞ்சா கடத்தி கைதானவர்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரளா எல்லை சோதனைச் சாவடி வழியாக, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எல்லை சோதனை சாவடி வழியாக கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் குமரி -கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை பகுதியில்.  தனிப்பிரிவு போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அது வழியாக வேகமாக வந்த செகுசு காரை மடக்கி சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்து எடைபோட்டு பார்த்தபோது,  105 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்ற 2- நபர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த நசீர் (52 ), இஞ்சிவிளையை சேர்ந்த சாதிக் அலி (39) என்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த தனிப்டை போலீசார் குட்கா மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News