குமரியில் முழுமையாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு

Update: 2021-04-25 12:30 GMT

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, இதனிடையே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கிற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது, இந்த உத்தரவின்படி இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊராடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார், அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.இதன் காரணமாக பொது போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன, அத்தியாவசிய தேவையான பால் விநியோகம் மற்றும் மருந்து கடைகள் மாவட்டத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருந்தது, மீதம் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News