சூறை காற்றுடன் கனமழை - 2 ஆவது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

குமரியில் தொடரும் சூறை காற்றுடன் கனமழையால் 2 ஆவது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு.

Update: 2021-09-28 15:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பலத்த காற்று வீசி வருகிறது.

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விட்டு இருந்தனர்.

இந்நிலையில் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தூத்தூர் மற்றும் இனையம் மண்டலத்தை சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 2 தினங்களாக செல்லவில்லை.

இதன் காரணமாக தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் 100 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டு உள்ளது.

Tags:    

Similar News