கடலுக்குள் விழுந்த குமரி மீனவர்- கண்டுபிடித்து தர அரசுக்கு கோரிக்கை

கடலுக்குள் தவறி விழுந்த குமரி மீனவர் மாயம் ஆன நிலையில், அவரை கண்டுபிடித்து தர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-02-25 00:00 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பிரான்ஸிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்,  கடந்த 17 ம் தேதி தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

சுமார் 40 நாட்டிகல் தொலைவில் இலங்கை கடலோர எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது,  நடைக்காவு பகுதியை சேர்ந்த ஜெபமணி, கடலில் தவறி விழுந்துள்ளார். உடனே, சக மீனவர்கள் கடலுக்குள் குதித்து தேடினர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் குமரி மாவட்ட மீனவர் சங்கங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீண்டும் மாயமான நபரை தேடி உள்ளனர்.

மாயமான நபரை தேடி, அவர்  கிடைக்காத நிலையில் படகில் இருந்த 6 மீனவர்களும் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பி வந்தனர்.  ஆழ்கடல் பகுதியில் மாயமான நபரை தேடி கண்டுபிடிக்க அரசும், கடலோர காவல்படையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News