காரில் ஏற்பட்ட தீ: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மெக்கானிக்
வேலை பார்க்கும் போது காரில் ஏற்பட்ட தீ, தலையில் பற்றி கொண்ட நிலையில் மெக்கானிக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.;
கேரளா மாநிலம் மலப்புறம் வளாஞ்சேரி பகுதியில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் பணியாளர் ஒருவர் கார் ஒன்றை பழுதுபார்த்துள்ளார். அப்போது காரின் முன்பக்கத்தில் இருந்து வந்த தீ, அந்த பணியாளரின் தலையிலும் திடீரென பற்றிக்கொண்டது.
துரிதமாக செயல்பட்ட அவர், தலையில் ஏற்பட்ட நெருப்பை அணைத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து, காரில் ஏற்பட்ட நெருப்பை, அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அணைத்துள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பரபரப்பை வெளிப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.