குடிபோதையில் பைக்கை மாற்றி எடுத்து சென்ற மர்ம நபரால் பரபரப்பு
குமரியில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை மாற்றி எடுத்து சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் இன்று மாலை வேளையில் பெண் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக தனது டிவிஎஸ் பெப் பைக்கில் புதுக்கடை சந்திப்பு பகுதிக்கு வந்துள்ளார்.
அவர் தனது பைக்கை தபால் நிலையத்தின் எதிர்புறம் வைத்துவிட்டு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவர் பைக்கை விட்டு சென்ற இடத்தில் அவரது பைக்கை போன்ற வேறொரு பைக் நின்றுள்ளது.
அந்த பைக்கின் முன்பக்கத்தில் ஒரு தொப்பியும் இருந்துள்ளது. தனது பைக்கை காணாததால் தனது கணவரை அழைத்து அவருடன் ஆட்டோவில் ஏறி சென்று புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த பைக் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அருகில் மதுக்கடை உள்ளது. அங்கு மது குடிக்க வந்த நபர் யாரோ தான் மது போதையில் பைக்கை மாற்றி எடுத்து சென்றிருக்க வேண்டும், அந்த மர்ம நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.