தீபாவளி பண்டிகை: குமரியில் உற்சாக கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியது

Update: 2021-11-04 14:00 GMT

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்

இந்துக்கள் மட்டும் அல்லாது அனைத்து மதத்தவர்களும் கொண்டாடும் பண்டிகையாக அமைந்துள்ளது தீபாவளி பண்டிகை. இந்த பண்டிகையை கொண்டாடும் வகையில் பணி நிமித்தமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியது காலையில் எழுந்த பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து குழந்தைகள் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

அதன் ஒரு பகுதியாக தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் இன்று காலை முதல் தங்களது குடும்பத்தினருடன் வந்து அம்மனை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றி தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக மனமகிழ்வுடன் கொண்டாடினர்.

Tags:    

Similar News