நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.