பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஜாமீன் மனு தள்ளுபடி

பிரதமர் மற்றும் இந்துக்கள் குறித்த அவதூறு பேச்சில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.;

Update: 2021-07-30 14:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், இந்து மதம், இந்துக்கள், இந்து மத நம்பிக்கைகள் குறித்தும், பாரத மாதா, பாரத பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா, மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை மற்றும் தூத்துக்குடி சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இருவரது  சார்பில் குழித்துறை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது, இதனிடையே ஜாமீனில் வரமுடியாத அளவில் 7 வழக்குகள் இருவர் மீதும் போடப்பட்டு உள்ள நிலையில் வழக்குகளுக்கு தகுந்த ஆதாரம் இருப்பதால் இருவரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே, அருமனை ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பழைய வழக்குகளுடன் சேர்த்து ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் மீது 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதால், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News