பறக்கும்படை சோதனையில் ரூ. 4.17 கோடி பறிமுதல்

Update: 2021-04-08 10:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 4.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி முதல் மார்ச் 5 ம் தேதி வரை நடந்த சோதனையில் ரூபாய் 4 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 189 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில் நாகர்கோவில் தொகுதியில் அதிகபட்சமாக ரூபாய் 1 கோடியே 76 லட்சத்து 11 ஆயிரத்து 778 ரூபாயும், கன்னியாகுமரி தொகுதியில் குறைந்தபட்சமாக ரூபாய் 26 லட்சத்து 13 ஆயிரத்து 45 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News