சபரிமலையில் ரூ.27 கோடிக்கு அரவணை பிரசாதம் விற்பனை: திருவாங்கூர் தேவசம் போர்டு
சபரிமலையில் அப்பம் அரவணை பிரசாதம் விற்பனை 27 கோடியை தாண்டியதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.
உலக புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலமான கேரளா மாநிலம் சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் சூழலில் அப்பம், அரவணை பிரசாத விற்பனை 27 கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
தற்போது தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் தளர்வாக கோவில் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும், பம்பையில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.