குமரியில் தேசிய நெடுஞ்சாலை பணியில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலை பணியில் முறைகேடு நடப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலத்த சேதம் அடைந்து காணப்படுகின்றது, ஏற்கனவே சேதமடைந்து உள்ள சாலைகள் கனமழையின் காரணமாக பெரும் சேதம் ஆகியுள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதில் சாலையில் உள்ள அரை அடி ஒரு அடி பள்ளங்களை நிரப்ப போடப்படும் Metal mix சல்லியுடன் கிறஷ்சர் பொடி என கூறி கழிவு மண்ணை கலந்து கொட்டிவிட்டு குழிகளை நிரப்பி அதன்மீது தார் சாலை அமைக்கப்படுகிறது.
பழைய தார் சாலையையும் கிளறி எடுக்கவில்லை, இப்படி தான் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பி உள்ள சமூக ஆர்வலர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பணி உத்தரவு நகல் பணி நடக்கும் இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் அல்லது மக்கள் கேட்டால் காட்டவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இப்படி தரம் இல்லாத சாலை அமைத்தால் வெகு விரைவில் சாலை பழுதடைந்து மீண்டும் பொதுமக்கள் பல ஆண்டுகள் பழுதான சாலையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் என்பதால் அதிகாரிகள் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.