வறுமையில் பெற்றோரால் கைவிடப்பட்ட 15 வயது சிறுவன் - காப்பகத்தில் சேர்ப்பு

வறுமையின் காரணமாக பெற்றோரால் கைவிடப்பட்ட 15 வயது சிறுவன் தன்னார்வலர் உதவியால் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

Update: 2021-07-15 13:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் 15 வயதே நிரம்பிய சிறுவன் அபிலாஷ், 10 வகுப்பு வரை படித்துள்ள சிறுவன் கொரோனா காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளான்.

தந்தையை இழந்த சிறுவனின் தாய்க்கும் கொரோனா காரணமாக வேலை எதுவும் இல்லாததால் வீட்டில் வறுமை தலைவிரித்தாடி உள்ளது, இதனால் நேரத்திற்கு உணவுகள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

மேலும் சிறுவனின் தாயார் வறுமை காரணமாக மகன் மீது அக்கறை காட்டாமலும் இருந்துள்ளார், இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய அபிலாஷ் திக்கணங்கோடு பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் குருசடியில் தங்கி அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ளவர்கள் அளிக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு மழையிலும் வெயிலிலும் போராட்டத்துடன் வாழ்ந்து வந்துள்ளான்.

இந்நிலையில் சிறுவனின் நிலையை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பசியில்லா குமரி என்ற அமைப்பின் மூலம் சாலை ஓரங்களில் தங்கி இருக்கும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்றவர்களுக்கு உணவழிக்கும் கருங்கல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிபு என்பவரிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த தகவல் அறிந்து சிறுவனை சந்தித்த சமூக ஆர்வலர் சிறுவனின் நிலமை மற்றும் ஆசைகளை கேட்டறிந்து திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஹேப்பி ஹோம் சிறுவர்கள் காப்பகத்தில் இணைத்து விட்டு மாணவரின் கல்வி செலவு போன்றவற்றை ஏற்றுள்ளனர்.

இதனால்ஆதரவற்று வாழ்வை இழந்து போக இருந்த வருங்கால பொறியாளர் ஒருவரை மீட்ட சமூக ஆர்வலருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News