கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 5 மற்றும் இதர வழக்குகள் என 5 என மொத்தம் 10 வழக்குகளும் , நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 8 மற்றும் இதர வழக்குகள் 4 என மொத்தம் 12 வழக்குகளும் ,
குளச்சல் உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 5 மற்றும் இதர வழக்குகள் என 11 என மொத்தம் 16 வழக்குகளும், தக்கலை உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 10 மற்றும் இதர வழக்குகள் என 12 என மொத்தம் 22 வழக்குகளும் என மொத்தம் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.