குமரியில் கஞ்சா, குட்காவுக்கு எதிராக 24 மணி நேர வாட்ஸ்அப் எண் அறிமுகம்
குமரியில் கஞ்சா, குட்காவுக்கு எதிராக 24 மணிநேர வாட்ஸ்அப் எண் காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது;
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருளை ஒழிக்க டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் ஒரு மாதம் (ஆப்ரேஷன்) தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருளுக்கு எதிராக தகவல் அளிக்க குமரி மாவட்ட காவல்துறை சார்பில் 7010363173 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டு ள்ளது.