குருவாயூர் கோவிலில் 1008 தேங்காய் ஒற்றை கல்லில் உடைக்கும் காட்சி வைரல்
குருவாயூர் கோவிலில் வித்தியாசமான முறையில் 1008 தேங்காய் உடைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.;
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள குருவாயூரப்பன் கோவிலில் நேர்ச்சைக்காக கொடுக்கப்படும் தேங்காய்கள் பூஜைகளுக்கு பின்னர் அந்த கோவிலில் உள்ள ஒற்றை கல்லில் உடைப்பது வழக்கம்.
இந்நிலையில் கோவில் பணியாளர் ஒருவர் ஜெண்டை மேலத்திற்கு தகுந்தாற் போல் தேங்காய் உடைக்கும் காட்சிகள் வைரலாகி உள்ளது,. அதன்படி 1008 தேங்காயை ஒற்றை கல்லில் உடைக்கும் பணியாளர் ஒரு தேங்காய்க்கு பின்னர் மறு தேங்காய் கையில் எப்படி வருகிறது என்பது பக்தர்களுக்கு தெரியாத வகையில் தேங்காய் எடுத்து உடைத்தார்.
ஒரு கை தேங்காயை உடைக்கும் போதே அடுத்த கை தேங்காயை எடுக்கும், மேலும் மேள தாளங்களுக்கு ஏற்றார் போல் உடல் அசையும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.