குமரி மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்துவதில் மோதல்: 10 பேர் கைது

குமரியில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்துவதில் மோதல் தொடர்பாக 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-11 14:15 GMT

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் சரமாரி தாக்குதலில் ஈடுப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த வள்ளவிளை மற்றும் முள்ளூர்துறை கிராமங்களை சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் நிறுத்தபட்டிருந்த இடத்தில் இரண்டு படகுகளும் ஒன்றோடொன்று மோதி படகு சேதம் அடைந்துள்ளது.

இது சம்பந்தமாக இருதரப்பினர் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு வந்து சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கடை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News