குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கனமழை காரணமாக குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் தாழ்வான பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.

Update: 2021-07-12 12:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நீடித்த கனமழை காரணமாக மலையோர பகுதிகளில் பெருமளவில் மழை நீர் வெளியேறியது. தொடர்ந்து அதிக அளவு வெளியேறிய மழைநீர் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதனை தொடர்ந்து அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாரு, தாமிரபரணி ஆறு, வீரணமங்களம் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீடித்தால் அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News