கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக சுமை, வேகம்: 60 வாகனங்கள் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அசுர வேகத்தில் வந்த 60 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு.

Update: 2021-07-07 12:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிக வேகத்தில் சென்ற 60 கனரக வாகனங்கள் மீது போலீஸார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டும் சட்ட விரோதமாக கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு  கனரக வாகனங்கள் சாலைகளில் சென்று வருவதாக  பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்து கொண்டிருந்தது.

மேலும் கனரக வாகனங்களில் இருந்து கீழே விழும் கற்களால் அதிக விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாக நிகழ்வாகி வருகிறது. இதனை தொடர்ந்து சட்டத்தை மீறும் வாகனங்கள் மற்றும் அதிக பாரத்துடன் அதி வேகமாக வரும் வாகனங்களை கண்காணித்து  நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் நடத்திய வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வேகமாக வந்த 60 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும் என்றும், அதிக பாரம் ஏற்றி வேகமாக வரும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News