ஆரவாரம் இன்றி அமைதியான முறையில் ரமலான் கொண்டாட்டம்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகை
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை கேரளா மாநிலத்தில் இன்றும் தமிழகத்தில் நாளையும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் கேரளாவை பின்பற்றி இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடினர்.
கொரோணா பரவலை தடுக்கும் வகையில் பள்ளிவாசல்களிலும் பொது மைதானங்களிலும் தொழுகை நடத்த வேண்டாம் என்றும் அவரவர் தங்கள் வீடுகளிலேயே தொழுகையை மேற்கொள்ளுமாறும் இஸ்லாமிய மத தலைவர்கள் கூறினர்.
அதன் படி குமரிமாவட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பான இடைவெளியை கடைபிடித்து தொழுகை மேற்கொண்டனர்.
மேலும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிகொண்டதோடு நோய்த்தொற்று அகன்று மக்கள் சகஜ நிலைக்கு வர வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
அதன்படி நாகர்கோவில், குளச்சல், தக்கலை, திருவிதாங்கோடு, குலசேகரம், களியக்காவிளை, தேங்காய்பட்டணம், திட்டுவிளை என மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஆரவாரம் இன்றி ரம்ஜான் கொண்டாட்டம் அமைதியான முறையில் நடந்தது.