ஈத்தாமொழியில் புதிய ஜெபக்கூடம் கட்டுமான பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
ஈத்தாமொழியில் புதிய ஜெபக்கூடம் கட்டுமானப்பணி நடைபெறும் நிலையில் கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூரில் உள்ள மக்கள் அப்பகுதியில் உள்ள கடற்கரை கிராம மக்களோடு இணைந்து இந்து - கிறிஸ்தவர்கள் அண்ணன் தம்பிகளாக காலகாலமாக பழகி வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதூர் அருகே ஒரு கோஷ்டியினர் ஜெபக்கூடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்து ஆயத்தப் பணிகள் செய்து வருகின்றனர். இதனால் ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், ஊர் பக்கத்தில் ஜெபக்கூடம் வந்தால் இரவு நேரங்களில் ஜெப கூட்டத்தில் நடக்கும் பிரார்த்தனைகளால் சத்தம் அதிகமாக இருந்து ஊர் மக்களுடைய நிம்மதி கேடு விளைவிக்கும் எனவே ஊருக்குள் ஜெபக் கூடம் கட்ட அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் ஊர் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழக அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.