குமரி அருகே கிறிஸ்தவ ஆலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
குமரியில் இந்துக்கள் வாழும் கிராமத்தில் திடீர் சர்ச் வந்துள்ள நிலையில் மதகலவரம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.;
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் பகுதியில் மெர்வின் என்பவர் வெளியூரில் இருந்து வந்து உரிய அனுமதி வாங்காமல் ஆத்ம மீட்பு ஊழியர்கள் என்ற பெயரில் சர்ச் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சர்ச் அமைந்துள்ள ஊரில் அனைவரும் இந்துக்கள் என்ற நிலையில் அவர்களை மதம் மாற்றும் முயற்சியை மேற்கொள்வதோடு வெளியூர்களில் இருந்து பொதுமக்களை அழைத்து வந்து ஜெப கூட்டம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அனுமதி இன்றி செயல்படும் சர்ச்சால் மத கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் அனுமதி இன்றி செயல்படும் சர்ச் மீதும் அதனை நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பாஜக வினர் கோரிக்கை மனு அளித்தனர்.