வழிப்பறி செய்து அந்த பணத்தில் கஞ்சா வாங்கி விற்பனை

குமரியில் வழிப்பறி செய்து அந்த பணத்தில் கஞ்சா வாங்கி விற்பனை செய்யும் கஞ்சா வியாபாரி குடும்பத்தினர், உண்மையை உடைக்கும் வீடியோ வைரல் ஆனது.

Update: 2022-03-15 14:45 GMT

வீடியோவில் பேசும் பெண்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகினார். இவரது மனைவி சரோஜா, மகன் விஷ்ணு ஆகியோருடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். இதனிடையே கல்லூரி படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே விஷ்ணுவிற்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு பெண் தொடர்பு கொண்டு உனது நண்பனின் தங்கை பேசுவதாக கூறி பேசி வந்துள்ளார். இதனிடையே திடீரென போன் செய்து தான் விபத்து ஏற்பட்டு சுசீந்திரம் அருகே நல்லூர் பகுதி சாலையில் விழுந்து கிடப்பதாக கூறி இரவு 9 மணிக்கு அழைத்துள்ளார்.

இதனை நம்பிய இளைஞர் விஷ்ணு சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 9 பேர் கொண்ட கும்பல் விஷ்ணுவை பிடித்து இரவு முழுவதும் வைத்து கொலை வெறி தாக்குல் நடத்தி உள்ளனர். மேலும் இளைஞரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் அவர் பயன்படுத்தி வந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விட்டு விஷ்ணுவின் வீட்டிற்கு போன் செய்து பணம் கேட்டும் மிரட்டி உள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து தப்பித்து வந்த விஷ்ணுவிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் கோட்டார் காவல் நிலையம், சுசீந்திரம் காவல் நிலையம், வடசேரி காவல் நிலையம் ஆகிய காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனிடையே விஷ்ணுவின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து மகன் மூலமாக பெறப்பட்ட தகவல் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்தில் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அவர்கள் பதிவு செய்த வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அந்த கும்பலானது கஞ்சா விற்பனை செய்ய தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க தங்களின் சகோதரிகளை பயன்படுத்தி ஆண்களுக்கு போன் மூலம் தொடர்ப்பு கொண்டு எதாவது பொய் தகவல்களை கூறி குறிப்பிட்ட இடங்களுக்கு வரவழைத்து, பின்னர் அங்கு வரும் நபரை தாக்கி அவரிடம் இருக்கும் பொருட்களை கைப்பற்றி அடித்து மிரட்டி அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஒரு சில கொலைகளும் நடந்து இருக்கலாம் என்றும் தெரிகிறது, மேலும் இந்த அராஜக சமூக விரோத செயலில் ஈடுபடும் அந்த 9 பேரின் முகவரி மற்றும் பெயர்களை தாக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி அவர்கள் அய்யாகுட்டி, முருகன், செல்லய்யா, மதன், லட்சுமணன், செல்வம் மற்றும் போன் செய்து அழைத்த பெண் கௌசல்யா என்பதும் தெரியவந்தது. இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு அதன் மூலம் கொள்ளை அடிக்கக்கூடிய பணத்தை தேனி, கொடைக்கானல் போன்ற இடங்களில் கஞ்சா வாங்கிவந்து நல்லூர், நாகர்கோவில் போன்ற இடங்களில் பதுக்கி வைத்து குடும்ப உறுப்பினர்களை வைத்து பொட்டலங்கள் செய்து அதை விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் இருந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் நடத்திய விசாரணையில் இதனை உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து இருக்கும் நிலையில் போலீசார் ஏன் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இச்சம்பவங்களில் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் குற்றச் செயல்கள் அதிகரிக்க அது வாய்ப்பாக அமையும் என்பதே உண்மை.

Tags:    

Similar News