வீட்டில் சாராயம் காய்ச்சியவர்கள் கைது..!
டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை பயன்படுத்தி வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரிகுமாரன் நாயர் மற்றும் தனிப்படையினருக்கு தேவிகுளம் பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே உதவி ஆய்வாளர் மற்றும் தனி படையினர் அங்கு அதிரடியாக சென்று அந்த வீட்டை சோதனை செய்த போது அங்கு அஸ்ஜித் மேத்யூ (20) மற்றும் செல்வகுமார்(40) இருவரும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தனர்.
மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்களை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த 60 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.