கன்னியாகுமரி சுனாமி நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு குமரியில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் மக்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 -ந் தேதி குமரி மாவட்ட கடலோர பகுதிகளை சுனாமி ஆழிப்பேரலை தாக்கியது. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் நினைவாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுனாமி நினைவு ஸ்தூபியும், பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சுனாமியால் இறந்தவர்களுக்கு 17-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நினைவு ஸ்தூபி பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நினைவு ஸ்தூபியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதே போன்று பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் சட்ட மன்ற உறுப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.