கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சிகிச்சை மையங்கள் தயார்
-குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜகுமாரி, மருத்துவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பேசுகையில், குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.