தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அமுல் ராஜ்(38) இவர் பலசரக்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக பலசரக்கு வகைகளை கொடுத்து வியாபாரம் செய்து வரும் இவரை வியாபார ரீதியாக பேச வேண்டும் என கூறி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்த பபி என்பவர் அழைத்துள்ளார் . அமுல்ராஜும் குமரி மாவட்டம் வந்து பபியை சந்தித்தார். அப்போது பபியின் நண்பர் கரூரை சேர்ந்த ராஜா என்பவர் அமுல்ராஜின் காரில் இருந்த 16 லட்சம் ரூபாயை எடுத்து விட்டு இருவரும் தப்பி சென்றனர்.
இது குறித்து அமுல்ராஜ் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் தக்கலை காவல் ஆய்வாளர் சுதேசன், பாபியை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.