அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லை - குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தீர்மானம்
அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லை என குமரி கிழக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் தலைமைகழகம் முதல் மாவட்ட கழகம், நகர கழகம், ஒன்றிய கழகம் வரை சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லை என கூறி சசிகலாவிற்க்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான பச்சைமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.