மருத்துவமனையில் திருடிய நபர் கைது

அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ உபகரணங்களை திருடிய நபர் கைது.

Update: 2021-05-08 02:19 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பயன்பாடு முடிந்த அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் சில மருத்துவ கருவிகள் உட்பட மருத்துவ உபகரணங்கள் காணாமல் போனது.

இது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மருத்துவ உபகரணங்களை திருடியது கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த ஆனந்த முருகன் (31) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News