குமரிக்கு 3500 லிட்டர் ஆக்சிஜன் வழங்கியது மகேந்திரகிரி விண்வெளி மையம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகேந்திரகிரி விண்வெளி மையம் 3500 லிட்டார் ஆக்சிஜனை வழங்கியது.

Update: 2021-05-11 14:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒருபுறம் நோய் தொற்றால் அவதி மறுபுறம் கொரோனா தடுப்பூசி சரிவர கிடைக்காமல் அவதி, மேலும் நோயாளிகளுக்கு சரிவர ஆக்சிஜன் கிடைக்காமல் மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழப்பு என குமரி மக்கள் அன்றாடம் மாவட்டத்தில் கொரோனா சித்திரவதையை அனுபவித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது, இந்நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சுமார் 3500 லிட்டர் ஆக்சிஜன் திரவம் டேங்கர் லாரி மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட ஆக்ஸிஜன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து சிலிண்டர்களின் அடைக்கப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட உள்ளது

Tags:    

Similar News