தடை நீங்கியது - குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

தடை நீங்கி சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2021-08-23 14:15 GMT

தடை நீங்கியதால் குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்கு முகம் உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் கடந்த வருடம் மே 10 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

இந்நிலையில் தொற்று பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் இன்று முதல் கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.

அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைகள், சூரிய உதய காட்சிகள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News