குமரியில் 12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற நாட்டியாஞ்சலி

குமரியில் 12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற நாட்டியாஞ்சலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.;

Update: 2022-03-02 14:30 GMT

நாமக்கல் நாட்டியாஞ்சலி அமைப்பு சார்பில் பல்வேறு பகுதிகளில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் கோவில் கலையரங்கத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று  காலை 6 மணி வரை 12 மணி நேரம்  தொடர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் விதவிதமான நாட்டியங்கள் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தியது அங்கு வந்து இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும், நடன ஆசிரியர்களுக்கும் பொன்னாடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Tags:    

Similar News