குமரியில் நீர் நிலைகளை சுத்தப்படுத்திய சமூக ஆர்வலர்கள்

குமரியில் நீர் நிலைகளை சுத்தப்படுத்திய சமூக ஆர்வலருக்கு ஆதரவு அளித்து, இளைஞர்களும் நீர் நிலைகளை சுத்தப்படுத்தினர்.

Update: 2021-07-29 12:00 GMT

குமரியில் நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் சமூக ஆர்வலர்கள்

நீர் இருந்தால்தான் விவசாயம் செழிக்கும் விவசாயம் செழித்தால்தான் மனிதன் ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும் என்ற விழிப்புணர்வை பறைசாற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர் பி.டி செல்வகுமார் தனது சொந்த செலவில் குளங்களை தூர்வாரி பராமரித்து வருகிறார்.

அதன் படி தன்னுடைய சொந்த செலவில் மயிலாடி அருகே உள்ள இரட்டை குளத்தில் படர்ந்துள்ள செடிகொடிகளை அகற்றி குளத்து நீரை சுத்தப்படுத்தி உள்ளார். இதன் மூலம் மயிலாடி பஞ்சாயத்துக்குட்பட்ட சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் நிலையில் அவருடன் பல இளைஞர்களும் கைகோர்த்து குளங்களில் உள்ள செடிகளை அகற்றி சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு குளங்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த சமூக ஆர்வலர் பி.டி செல்வகுமார் அரசை மட்டும் எதிர்பார்க்காமல் பொதுமக்களும் தங்கள் பகுதி நீர் நிலைகளை சுத்தமாக வைத்து இருக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News