சபரிமலை கேரளாவிற்கு மட்டும் சொந்தம் அல்ல நாட்டிற்கே சொந்தம்: பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலை கேரளாவிற்கு மட்டும் சொந்தம் அல்ல ஒட்டுமொத்த நாட்டிற்க்கே சொந்தம் என பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2021-12-08 13:45 GMT

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது காசி விஸ்வநாதர் ஆலயத்தை வரும் 13 ஆம் தேதி பாரத பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அரசியலில் மதம் கலக்கிறது, எந்த வகையிலும் மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது.

கொரோனா, ஒமைக்ரான் போன்ற காரணங்களைச் சொல்லி சபரிமலையில் எந்த ஆகம பூஜைகளையும், வழிபாடுகளையும் முடக்கக்கூடாது.

சபரிமலையில் நெய்யபிஷேகம் போன்ற விஷயங்களை கொண்டுவர வேண்டும், சபரிமலை கேரளத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது என தெரிவித்தார்.

Tags:    

Similar News