விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிதி: குமரி அதிமுகவினர் கோரிக்கை
குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க அதிமுக கோரிக்கை.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த அதிதீவிர கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது.
பல்வேறு கிராமங்களில் மழை நீர் புகுந்ததால் உடைகள் உடைமைகள் அனைத்தையும் இழந்த பொது மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதேபோன்று மாவட்டத்தில் 2800 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்ட நெல், வாழை, தென்னை, ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த அதிதீவிர கனமழையின் காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க குமரி மாவட்ட அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.