குமரியில் 34,422 பேருக்கு ரூ.139.63 கோடி நகை கடன் தள்ளுபடி
குமரியில் 127 கூட்டுறவு சங்கம் மூலம் பெற்ற 139.63 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.
இதனிடையே நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக முதல்வர் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடியை பயனாளிகளுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் பொது நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 34,422 பயனாளிகளின் நகை கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வழங்கினார்.
அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகை கடன் தள்ளுபடி திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த திட்டத்தின் படி மாவட்டத்தில் மொத்தம் 127 கூட்டுறவு சங்கம் மூலம் பெறப்பட்ட 139.63 கோடி ரூபாய் மதிப்பிலான நடை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.