நாகர் கோவிலில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்

சிறப்பு முகாம் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.;

Update: 2021-10-31 14:45 GMT

நாகர்கோவிலில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் கடன் தொகைகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக எச்.டி.எப்.சி. வங்கி மூலமாக பாரத பிரதமரின் ஸ்வானிதி திட்டத்தின் படி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் சிறப்பு கடன் முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அவர்களின் தொழில் வசதிக்காக கடனுதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

Tags:    

Similar News