அரிசி ஆலையால் சுவாச பிரச்சனை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரியில் தனியார் அரிசி ஆலையால் சுவாச பிரச்சனை ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவன அரசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாம்பல், உமி போன்றவற்றால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் மாசு படுவதாக கூறப்படுகிறது.
மேலும் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் துகள்கள் காற்றில் கலப்பதால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு நோய் ஏற்படும் நிலை வந்துள்ளதாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்த அப்பகுதி பொதுமக்கள் அந்த ஆலையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.