ரெம்டெசிவிர் மருந்து பதுக்கலா? குடோன்களில் அதிகாரிகள் சோதனை

கன்னியாகுமரியில், ரெம்டெசிவிர் மருந்து பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, குடோன்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2021-04-30 12:30 GMT

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை.

இதனிடையே, நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மருந்துக்கடை மற்றும் மருந்து குடோன்களில் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் முகக் கவசங்கள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, நாகர்கோவிலில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திடீரென சோதனை மேற்கொண்டனர்.

எனினும், இந்த சோதனையில் பதுக்கல் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News