நெற்றியில் விபூதி பட்டையுடன் டீ குடித்த எம்.பி : ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்

சாதாரண டீ கடையில் சக பொதுமக்கள், இளைஞர்களுடன் பேசிக்கொண்டே டீ அருந்திய விஜய் வசந்த் எம்.பி-யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.;

Update: 2022-05-11 09:00 GMT

சாதாரண கடையில் டீ குடிக்கும் எம் பி விஜய் வசந்த குமார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக மறைந்த தொழில் அதிபரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான வசந்தகுமாரின் மறைவிற்கு பின்னர் நடைபெற்ற இடை தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் தனது தந்தையின் பாணியில் பொதுமக்களையும், ஏழைகளையும் தேடி சென்று தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் நெற்றியில் பட்டையுடன் தேனீர் கடையில் இளைஞர்களுடன் தேனீர் அருந்தும் விஜய் வசந்த் எம்.பி யை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சாதாரண டீ கடையில் சக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசிக்கொண்டே ஸ்ட்ராங் டீ அருந்திய விஜய் வசந்த் எம்.பி-யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News