குமரியில் கொரோனா பாதிப்பு குறைந்தது - மக்கள் ஆறுதல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நான்கில் ஒரு பகுதியாக குறைந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

Update: 2021-06-10 12:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அரசு அறிவித்த முழு ஊரடங்கு குமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்த போலீசார் தங்கள் சோதனையை தீவிர படுத்திய நிலையில் வழக்கு பதிவு வாகனம் பறிமுதல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயக்கம் காட்டினர்.இதனால் மாநகர மற்றும் நகராட்சி பகுதிகளில் தொற்றின் வேகம் குறைந்தாலும் கிராம பகுதிகளை போலீசார் மற்றும் சுகாதார துறை கண்டு கொள்ளாததால் அங்கு தொற்றின் வேகம் அதிகரித்தது.

குறிப்பாக மலைவாழ் கிராமங்கள், அருமநல்லூர், ஞானம், உட்பட அடர்த்தியான வீடுகளை கொண்ட பகுதிகளில் கொரோனாபாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்தது.இதனிடையே மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக குமரியில் தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது, தற்போதைய கொரோனா பாதிப்பு 384 ஆக உள்ள நிலையில் குமரிமாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5907 ஆக உள்ளது.

இவர்களில் 477 நபர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் 1234 நபர்கள் கோவிட் கேர் சென்டர்கள் மற்றும் 4196 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமரியை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 வரை இருந்த பாதிப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்து இருப்பது மாவட்ட மக்களிடையே ஆறுதலை அளித்துள்ளது.

Tags:    

Similar News