குமரியில் அம்மா மினி கிளினிக்கை மூட பொதுமக்கள் எதிர்ப்பு
அம்மா மினி கிளினிக்கை மூடும் அரசின் முடிவிற்கு குமரி மாவட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.;
தமிழகம் முழுவதும் ஏழைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்கள் உருவாக்கப்பட்டன.
கிராமப்புறங்களில் இருக்கும் பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் பயன்பெற்று வந்த தரமான மருத்துவ சேவையை தமிழக அரசு மூடியது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 60 மினி கிளினிக்கும் மூடப்பட்டன.இந்நிலையில் தமிழக அரசின் இந்த செயலுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் அம்மா மினி கிளினிக் திட்டத்தால் அனைவரும் பயன்பெற்று வரும் நிலையில் இந்த திட்டத்தை மக்களிடம் கருத்து கேட்காமல் மூடியது தவறு என தெரிவித்தனர்.