காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் கொடி அணிவகுப்பு;
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு (FLAG MARCH) ஊர்வலம் நடைபெற்றது.
இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் தெங்கம்புதூர் மற்றும் NGO காலனி பகுதிகளில் நடைபெற்றது. மேலும் இதில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் 3 பேரும், உதவி ஆய்வாளர்கள் 5 பேரும், காவல் ஆளினர்கள் 179 பேரும், துணை ராணுவ படையினர் 65 பேர் உட்பட மொத்தம் 253 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.