11 ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மாயம்- பெற்றோர் புகார்

குமரியில் 11 ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மாயம் ஆன நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.;

Update: 2022-03-04 16:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் அனந்தன் நகரை சேர்ந்தவர் ராஜன் எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் இரண்டாவது மகன் அன்றோ நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல பஸ்ஸில் கடந்த 26 ஆம் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற நிலையில் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தேடியும் மகனைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் பெற்றோர் இன்று ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன 11 ஆம் வகுப்பு மாணவனை தேடி வருகின்றனர். மேலும் தனது மகனை உடனடியாக கண்டுப்பிடித்து தர வேணடும் என மாணவனின் தாய் விமலா கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News